தர்பூசணி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா சுவாரசிய தகவல் இதோ ?



நாம் சாதாரணமாக நினைக்கும் அசாதாரண மான பழம் தர்பூசணி. இதில் நீர்சத்து 91% இருப்பதால், தண்ணீர்ப் பழம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. என்று உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படும். தர்பூசணியில் பூர்விகம் தென் ஆப்பிரிக்க என்று கருதப்படுகிறது. இது கொடி வகையைச் சேர்ந்தது. உடல் வறட்சியைப் போக்கி, நீர்ச்சத்தை  அதிகரித்து உடனடி ஆற்றல் தருவதோடு, உடல் வெப்பம், இரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கிறது.

விட்டமின்கள் ஏ,பி 1, பி 2, பி 3, பி 5, பி 6, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னிசியம்,பாஸ்பரஸ்,ஜின்க்,  லைக்கோபின் என பல சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன. கோடை மட்டுமின்றி எல்லாக் காலத்திலும் சாப்பிடுவதற்கு உகந்தது.

பலன்கள் பல:

தர்பூசணியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், செல்களை பழுதில்லாமல் பராமரிப்பதுடன் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றன. இதனால் மாரடைப்பு வராமல் காக்கப்படுகிறது. நோய் எதிர்ப்புத் திறன் வலுவடைகிறது. இதில் அதிக அளவில் உள்ள பொட்டாசியம்,ரத்த அழுத்தத்தை சரியாகப் பராமரிப்பதுடன் சிறுநீரகக்கல் உருவாகமலும் தடுக்கிறது.

கரோட்டினாய்டு மற்றும் லைக்கோபின் என்னும் வேதிப்பொருள் கேன்சர், கிருமிகளை எதிர்த்து செயலாற்றுகிறது. குறிப்பாக, ப்ராஸ்டேட் சுரப்பி (ஆண்களுக்கு), கருப்பை (பெண்களுக்கு), மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வரவிடாமல் தடுப்பதில் ஏதன் பங்கு அதிகம்.

* தர்பூசணி உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின், பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. குழந்தைகளுக்குத் தொடர்ந்து சாப்பிடக் கொடுத்து வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

* பல் ஈறுகள் உறுதியாகவும், காயங்கள் விரைவில் ஆறவும் தர்பூசணி உள்ள வைட்டமின் சி சத்து உதவுகிறது. இதிலுள்ள கால்சியம், கீழ்வாதம் மற்றும் முடக்கு வாதம் உண்டாகாமல் தடுக்கிறது.

* புரதச்சத்து ஆற்றலாக மாற்றவும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் தர்பூசணி உள்ள வைட்டமின் பி 6  உதவுகிறது. வைட்டமின் பி உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது. உடல்பயிற்சி மற்றும் கடின வேலை செய்தபின், தர்பூசணி சாப்பிட்டால் களைப்பு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

*குறைவான கலோரி உள்ள பழம் என்பதால் , உடல் பருமன் உள்ளோர் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறையும். நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது.

*தோலில் கரும்புள்ளி,அலர்ஜி உண்டான அடையாளங்கள் இருந்தால், தர்பூசணி சாற்றைத் தடவினால் சரியாகும். பழத்தைப் பூசி குளிர்ந்த நீரில் குளித்தால் தோல் பளபளப்பாகும். அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

*நார்ச்சத்து இருப்பதால் உடலில் தேவையற்றக் கழிவுகள் வெளியேற்றுவதோடு, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கிறது.