PERSONALITY OF THE DAY - JUMPCUTS HARI BASKAR



 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைனு சொல்வாங்க அந்த வாக்கியம் அனைவரும் கேள்வி போட்டிருக்கோம் ஆனா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடித்த ஒரு துரு துரு யூடியூப்  பையன்தான் JUMP CUTS ஹரி பாஸ்கர். என்னடா அப்படி என்ன இவர் எல்லா மனதையும் கவர்ந்தார் என்றால் , ஆம் அந்த அளவிற்கு இவரின் நடிப்பு சுட்டித்தனமான பேச்சு. குழந்தைதனமான சிரிப்பு , முரட்டுத்தனமான அடக்கம், இவை அனைத்தும் ஒரு சேர நடிக்கும் இவரை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.

 

JUMP CUTS என்ற ஆங்கில பெயர் கொண்ட ஒரு யூடியூப் சேனல் இந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்ததென்றால் சும்மாவா. அந்த அளவிற்கு தன் உழைப்பையும் தன்மீதுள்ள நம்பிக்கையும்தான் இவரின் வெற்றிக்கு முதல் படி.

 

சென்னையில் படிக்கும்போதே நிறைய கனவுகளோடு இருந்த இவருக்கு தன் நண்பன் நரேஷின் மூலம் சேர்ந்து வெற்றிக்கூட்டணியாக தமிழகம் முழுக்க சென்றிருக்கின்றனர். இவர்கள் பதிவிடும் ஒவ்வொரு விடியோவும் ஹிட் ரகம் அந்த அளவிற்கு நல்ல நகைச்சுவை தரும் வண்ணத்தில் உள்ளது.

 

இதில் IPHONE , DAD SON , HOTEL  வீடியோ எல்லாமே அனைவரையும் சிரிக்க வைக்கும். இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கும் ஹரி பாஸ்கர் அவர்கள் மென்மெலும் வளர 24X7TAMIL சார்பாக வாழ்த்துகிறோம்.