PERSONALITY OF THE DAY - ARUN VENKATESH



 

ஒரு சின்ன குறிகிய வட்டத்தில் பெரிய வட்டாரமே உருவாக்குபவன் தான் திறமைசாலி அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த திறமையான தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி அருண் வெங்கடேஷ் பற்றி இன்று ஒரு தொகுப்பு.

பிறந்த ஊர் கோயம்பத்தூர். பள்ளி , கல்லூரி படிப்பு வால்பாறை.

 அருண் அவர்களுக்கு மாடலிங் மீது மிகுந்த ஆர்வம். இதனாலேயே இவற்றின் படிப்பை முடித்த கையோடு சினிமா சம்பந்தமான துறையை தேர்வு செய்தார். அதன் பின் கோயம்பத்தூரில் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் , பகுதி நேர வேலையாக செய்து வந்த இவருக்கு விஜய் டிவி புதிய முகம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 

இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் அருண் டாப் 8 போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு அடுத்தகட்டத்துக்கு சென்றார். அதன் பின் சில குறும்படம் நடித்த இவருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்ததுதான் சன் மியூசிக் VJ . இதில் தேர்வு செய்யப்பட்டு வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். 

அதன் பின் சில காரணங்களால் விலகி துபாயில் NO.1 தமிழ் FM  ரேடியோவான 89.4 TAMIL FM ல் தற்போது ரேடியோ ஜாக்கியாக தன் பணியை தொடர்கிறார்.

அதுமட்டுமில்லாமல் யூடியூபில் கலக்கி வருகிறார். BEING BRAVO என்ற சேனலின் மூலம் தன் தனி திறமையை வெளிபடுத்துகிறார்.
இவரின் மிகப்பெரிய பலமே தன் குறும்புத்தனமும் , நகைச்சுவையான  பேச்சும் தான். இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம். இவர் இதுபோல் என்றும் வாழ்க்கையில் வெற்றி பெற 24x7TAMIL  சார்பாக வாழ்த்துகிறோம்.