PERSONALITY OF THE WEEK PERUVAI SANTHOSH..



 

"பெருவை" என்றால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் . இந்த ஊரில் பெருவை சந்தோஷ் என்று கேட்டால் யாருக்கும் தெரியாமல் இருக்காது.  பெருவை சந்தோஷ் வீடு எங்கே இருக்கிறது என்று ஒருவரிடம் கேட்டால் பலரும் சேர்ந்து வழிகாட்டும் அளவிற்கு தன் ஊருக்கு பெருமை சேர்த்திருக்கும் மனிதர் "பெருவை"  சந்தோஷ். 

தன் பேச்சு திறமையால் பட்டிமன்றங்களில் பேசி பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் இவர். பொதுவான கருத்துக்களை பொது இடங்களில் எல்லோருக்கும் புரியும்படி அடித்துக்கூறும் திறம் படைத்தவர். உலகத்தமிழர்கள் அனைவரையும் தன் பட்டிமன்ற பேச்சு திறமையால் தன் வசப்படுத்தி வைத்துள்ளார் இவர் .

இவர் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போது இளைஞர்களின் சாதனை நாயகனாக உருவெடுத்துள்ளார். பட்டிமன்றமன்றங்களில் இவர் பேச்சுதான் அதிகம் ரசிக்கப்படும் அதனாலேயே இவருக்கு "பேச்சு சுனாமி"  என்ற அடைமொழி உள்ளது.

பல தொலைக்காட்சிகளில் இவர் பேசியிருக்கிறார். தற்போது பல ஊடகங்களிலும் இவரின் பேச்சுதான், அந்த அளவிற்கு புகழடைந்து  வருகிறார். சந்தோஷ் தற்போது சட்டம் படித்துவருகிறார். இவர்தான் தற்போது தமிழ்நாடு சட்ட மாணவர்களின் ஒருபிரிவில் செயலாளர் பொறுப்பில் உள்ளார் என்பதும் ஒரு சிறப்பம்சம்.

இவர் பேசிய அனைத்து காணொளியும் சமூகவலைத்தளத்தில் ஒரு கோடிக்கு மேல் பார்வையாளர்கள் , இது எந்த ஒரு தனிமனிதனுக்கு கிடைக்காத வரம். அந்த அளவிற்கு தன் கம்பீர பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. 

தன்னைவிட தன் மண்ணை நேசிக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர். தன் வறுமையிலும் பெருமையாய் காலரை தூக்கிவிட்டு தன் ஊரான 
பெருவைக்கு பெருமை சேர்த்த இந்த "பெருவை" சந்தோஷ்தான் இந்த வாரத்தின் " PERSONALITY OF THE WEEK " . இவரை போல தன்னம்பிக்கை உள்ள மனிதராய் நாமும் வளரவேண்டும் என்று கூறிக்கொள்கிறது 24X7TAMIIL ஊடகம்.