விவசாயிகள் மகிழ்ச்சி..! மேட்டுர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. 

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது பல மாநிலங்களில் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவும், கேரளாவும் இந்த மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் காவிரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகமாகி கொண்டே சென்றது. நேற்று அதிகாலை காவிரியில் 1.70 லட்சம் கனஅடி நீர் வரத்து இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு நீர் வரத்து 2 .95 லட்சம் கன அடியாக உயர்ந்தது. தற்போது காவிரியில் நீர் வரத்து 2.53 லட்சம் கன அடியாக உள்ளது. மேட்டுர் அணையின் நீர் மட்டம் 101 அடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டுர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையை முதலவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.