உயிரிழந்த இந்து பெண்ணுக்கு இறுதி காரியம் செய்த இஸ்லாமியர்கள்..!! உறவினர்கள் நெகிழ்ச்சி..! 

உத்திரபிரதேசத்தில் இறுதி சடங்கு நடத்த பணமின்றி தவித்த இந்து குடும்பத்தினருக்கு அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பணம் கொடுத்து உதவியதோடு இறுதி சடங்குகளையும் இந்து வழக்கப்படி உடனிருந்து நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக உள்ளது.


வாரணாசியை சேர்ந்த 19 வயது இளம் பெண் சோனி. உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எல்லோரும் ஒருநாள் உயிர் இழப்பது மட்டும்தான் உண்மை ஆனால் சிறு விஷயங்களுக்கு நாம் நமக்குளேயே சண்டையிட்டு கொள்ளவது வேதனை அளிப்பதாகவும் சோனியின் குடும்பத்திற்கு உதவி செய்த ஷைகின் தெரிவித்தார். இந்த உதவியின் மூலம் இந்தியாவின் மத ஒற்றுமையை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்பதே உண்மை.