ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவால் தமிழகத்திற்கு ஆந்திரா தண்ணீர் திறப்பு ..!!தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு திறந்துள்ளது. ஆந்திராவில் ஸ்ரீசைலம் நீர் தேக்கத்திலிருந்து தற்போது வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக 25000 கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.


கிருஷ்ணா நதி நீரானது இன்னும் 20 நாட்களில் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் குடிநீர் தேவை பூர்தியாகும் என தெரிகிறது. இந்த பருவத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தருமாறு ஆந்திரா முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார். இதனை தமிழக அமைச்சர் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனிடம் தெரிவித்தனர்.

தமிழக அரசு கோரிக்கையை ஏற்று ஸ்ரீசைலம் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் சோமாசிலா அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் தமிழகத்திற்கு வந்தடைய உள்ளது.