வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ நிறுவனம்...! அடேங்கப்பா.. 

ரிலையன்ஸ் குழும வருடாந்திர 42 வது மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி அனைத்து இந்தியர்களும்  டிஜிட்டல் முறையில் இணையவேண்டும் அதுவே ஜியோவின் கனவு என்றும் கூறினார்.

ரிலையன்ஸ் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி  நெட் ஒர்க் நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி ஜியோ பைபர் திட்டத்தை அறிமுகபடுத்தினார். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஜியோ பைபர் நடைமுறைக்கு வரும் என்று கூறினார். 


ஜியோ பைப்பரில் இணையதள வேகம் நொடிக்கு 1 GB யாக அதிகரிக்கப்பட்டதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் ஜியோ பைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 1000 ரூபாய் வரை சந்தா தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜியோ பைபர் சலுகையாக 4 K டிவி மற்றும் செட்டப்பாக்ஸ் இலவச சேவை என்று ஜியோ பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.