முஸ்லிமாக மாறினாரா டிடி மற்றும் அவரது அக்கா பிரியதர்ஷினி..? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் சர்ச்சை.. 

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் புகழ்பெற்ற தொகுப்பாளினி என்றால் அது டிடி என்று எல்லோராலும் அழைக்கப்படும் திவ்யதர்ஷினிதான். டிடி இதுவரை அனைத்து புகழ் பெற்ற பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ளார். இவருடையே பேட்டி மற்றும் ஷோவிற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். டிடி சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். டிடி தற்போது விஜய் டிவியில் "என்கிட்ட மோதாதே" என்கிற ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். 

டிடிக்கு திருமணமாகி விவாகரத்து ஆனது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் இணையத்தில் தனது அக்கா பிரியதர்ஷினி மற்றும் தம்பியின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதில் மூவரும் முஸ்லீம் போல உடையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர். அதாவது டிடி மற்றும் பிரியதர்ஷினி இஸ்லாமிய பெண்கள் அணியும் பருதாவும், அவரது தம்பி முஸ்லீம் ஆண்கள் அணியும் குல்லாவையும் அணிந்து "EID MUBARAK" என்று பக்ரீத் வாழ்த்து கூறியுள்ளனர். இதைவைத்து பார்க்கையில் நெட்டீசன்கள் இவர்கள் முஸ்லிமாக மாறிவிட்டார்களா..? என்று பேசிவருகின்றனர். உண்மை என்னவென்று அவர்களுக்கே தெரியும்.