பிக்பாஸில் பங்கு பெற்றதற்கு கஸ்தூரிக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டால் ஆடிப்போயிடுவீர்கள்..!!கடந்த வாரம் பிக்பாஸில் நியூ எண்ட்ரியாக வீட்டிற்குள் உள்ளே வந்தவர் நடிகை கஸ்தூரி. கஸ்தூரி வந்ததிலிருந்து பிரச்சனைகள் அதிகம் வெடிக்கும் என்று பலரும் பேசினர். ஆனால் அவர் பிரச்சனைக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அமைதியாக போட்டியிடுகிறார்.

நடிகை கஸ்தூரி பிக்பாஸில் நான் பங்கேற்கமாட்டேன் என்றும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிவந்தார். ஆனால் திடீரென்று அவர் உள்ளே வந்ததால் பலருக்கும் ஆச்சரியமே அதுமட்டுமல்லாமல் வனிதா விஜய்குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று வந்தார். 

இந்நிலையில் கஸ்தூரி வனிதா விஜயகுமார் இடையே மோதல்கள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருக்க நடிகை கஸ்தூரிக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கேட்ட பிக்பாஸ் ரசிகர்கள் வாய் அடைத்து போயுள்ளனர்.