சாண்டியை கோபப்படவைத்த வனிதா விஜயகுமார் அதிரடியான வீடியோ ப்ரமோ..!! 

இன்று முகினும், அபிராமியும் பயங்கரமாக சண்டைபோட்டு கொண்டிருக்கும் வீடியோ ப்ரமோ ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு இப்படி ஒரு சண்டை நிகழ்ந்தது. இதற்கு முக்கிய காரணமே வனிதா விஜயகுமார் தான் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

ஏனென்றால் வனிதா விஜயகுமார் வீட்டிற்கு வந்ததிற்கு அடுத்துதான் இந்த பிரச்சனை ஆரம்பமானது. அபிராமி முகின் சண்டையால் பிக்பாஸ் வீட்டினர் என்ன செய்வது என்று தெரியாமல் முகினை சமாதானம்படுத்தினர். முகின் கண்கலங்கி அழுது கொண்டிருந்த வேலையில் பிக்பாஸ் வீட்டினர் அனைவரும் முகினை சமாதானம்படுத்தினர்.

ஆனால் அப்போது வனிதா விஜயகுமாரை பார்த்து சாண்டி மூட்டிவிடாதீர்கள் என்பதுபோன்ற ஓப்பனாக பேசியுள்ளார். இதனை பார்த்த வனிதா விஜயகுமார் சாண்டியிடம் சண்டை போட ஆரம்பிக்கிறார். இனி என்ன நடக்க போவது என்று இன்று இரவு பார்த்தால்தான் தெரியும்.