நேர்கொண்ட பார்வை தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா ? 

அஜித் நடிப்பில் வெளியான " நேர்கொண்ட பார்வை" திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. அஜித் நடிப்பிலேயே முதல் முறையாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் தான் வெளிநாட்டில் அதிக வசூல் செய்துள்ளதாம். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் சென்னையில் மட்டும் 5 நாட்களில் 6 .5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

5 நாட்களில் மட்டும் நேர்கொண்டபர்வை திரைப்படம் 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 4 நாட்களில் இப்படம் தமிழகத்திலேயே 80 , 90 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலக அளவில் 100 கோடியை தொடும் என்று கூறப்படுகிறது.