அபிராமியை கோபத்துடன் அடிக்க சென்ற முகின்..! அதிர்ச்சி ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரல்..!! 

நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக வனிதா விஜயகுமார் நுழைந்தார். வனிதாவை போட்டியாளர்கள் பார்த்ததிலிருந்து உள்ளுக்குள் பயம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் வனிதா உள்ளே நுழைந்ததும் எல்லோரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். முக்கியமாக அபிராமி முகின் காதலை பயங்கரமாக விமர்சித்தார்.


ஒரு கட்டத்தில் அபிராமி முகின் மேல் வைத்த காதலை வெறுத்தார். இது ஒருபுறம் இருக்க இன்று பிக்பாஸ் ப்ரோமோவில் அபிராமியும் முகின்னும் சண்டையிட்டு கொண்டனர். அதில் அபிராமி முகின்னை திட்ட ஆரம்பிக்க முகின் கோவத்தில் அபிராமியை சேரை தூக்கி அடிக்க வருகிறார். இதை பார்த்த போட்டியாளர்கள் பயந்து போயினர். 

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸில் இது போன்ற சண்டைகள் இதுவரை நடக்காததால் இன்று நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று உறுதியாக தெரிகிறது.