5 நாள் முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் சென்னை பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா ? அதிரும் பாக்ஸ் ஆபீஸ்..!! 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூலில் மாஸ் கட்டி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நேற்று வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை இப்படம் வசூலில் வெறித்தனமாக வேட்டையாடியுள்ளது. அதாவது சென்னை பாக்ஸ் ஆபீசில் நேற்று மட்டும் 1.15 கோடி வசூலித்துள்ளதாம்.

சென்னையில் மட்டும் 5 நாளில் ரூ 6 .7 கோடி வசூல் செய்துள்ளது. இதைவைத்து பார்க்கையில் அஜித் தான் பாக்ஸ் ஆஃபீஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளார்.