பிகில் படத்தின் நயன்தாராவின் லுக்கை வெளியிட்ட அஜித் ரசிகர்...!!! டி-சர்ட் அணிந்து போஸ் கொடுத்த நயன்தாரா. புகைப்படங்கள் உள்ளே.நயன்தாரா தமிழ் திரையுலகில் நீண்ட நாள் நிலைத்து நிற்கும் ஒரே நடிகை. அதுமட்டும் அல்லாமல் தமிழக ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒரே நடிகையும் இவர் தான். அந்த அளவுக்கு வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தவர். "ஐயா" என்ற படத்தில் தமிழில் அறிமுகம் ஆகி இன்று தளபதி விஜயின் "பிகில்" படத்திலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் "தர்பார்" படத்திலும் ஹீரோயினாக நடிக்கின்றார். 

"பிகில்" படத்தில் தளபதி விஜய் அவர்கள் கால்பந்து பயிற்சியாளராக மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் படத்தயாரிப்பு குழுவிடம் இருந்து வந்தது. அது போல் நயன்தாராவின் ரோல் என்ன அவர் இந்த படத்தில் எந்த மாறி வேடத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் தற்பொழுது வந்த செய்தி என்ன என்றால் நயன்தாரா இந்த படத்தில் "ஏஞ்சல்" என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அது மட்டும் அல்லாமல் ஒரு தீவிர அஜித் ரசிகர் ஒருவர் "பிகில்" ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் நயன்தாரா மாடர்ன் உடை அணிந்து உள்ளார்.