இணையத்தை கலக்கி வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியின் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை யார் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று பெண்கள் இடையே போட்டி நிலவியது. அந்த வகையில் டாப் 5 போட்டியாளராக அபர்ணதி தேர்வு செய்யப்பட்டார்.


ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர் எலிமினேட் ஆனார். அபர்ணதி கும்பகோணத்தில் பிறந்த தமிழ் பெண். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அடுத்த மாதமே அவருக்கு பட வாய்ப்புகள் அமைந்தது. ஜிவி.பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தில் அபர்ணதி ஹீரோயினாக நடித்து வந்துள்ளார்.

ஆர்யா பற்றின எந்த ஒரு செய்திகள் வெளியானாலும் அபர்ணதி அவ்வப்போது தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டலாக பதிவு செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். இதோ அவரது லேட்டஸ்ட் மாடல் புகைப்படங்கள்.