பிரபல நடிகரை விந்தணு தானம் செய்ய சொன்ன VJ பாவனா..! ட்விட்டர் பதிவால் சர்ச்சை..! யாரை கூறியுள்ளார் பாருங்களேன்…

[wp_ad_camp_2]

சூப்பர் சிங்கர் மற்றும் ஜோடி நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி பாவனா. இவர் தொகுத்து வழங்கும் பாவனைகள் அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக பிரபல தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் பாவனா. இவருக்கு திருமணமாகி கணவர் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பாவனா சென்னையில் தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பாவனா பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த “வார்” படத்தை பார்த்துள்ளார். அதன்பின் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது “வார் படம் நன்றாக உள்ளது. ஹிருத்திக் ரோஷனும், டைகர் ஷெராப்பும் நன்றாக நடித்துள்ளனர். இனி ஹ்ரித்திக் ரோஷன் அவரது நடிப்பை காலத்திற்கும் தொடர வேண்டும். இது போன்று நிறைய படங்கள் நடிக்க வேண்டும். அவரது விந்தணுவை தானம் செய்யவேண்டும்.” என்று இரட்டை அர்த்தத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவால் இணைய வாசிகள் வெறுப்படைந்து, தொகுப்பாளினி பாவனாவை திட்டி வருகின்றனர். பலரும் பாவனாவை கிண்டல் செய்து வருகின்றனர். அதற்காக இப்படியா ட்வீட் செய்வது என்று பலரும் குமுறி வருகின்றனர். இதோ அவரது பதிவு.