பிக்பாஸ் இறுதி போட்டியில் கலந்துகொள்ளாதது ஏன்..? பிக்பாஸ் சரவணன் என்ன கூறியுள்ளார் பாருங்களேன்..!

[wp_ad_camp_2]

பிக்பாஸ் இறுதிப்போட்டியில் 16 பேரில் போட்டியிட்ட இரண்டு போட்டியாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அது யாரென்று எல்லோருக்கும் நன்றாக தெரிந்த ஒன்றே. சேரனை திட்டியும், பெண்களை பற்றி தவறான புரிதலுடன் பேசியதற்கு காரணமாக வெளியேற்றப்பட்ட சரவணனும், பிக்பாஸ் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்தி தனது கையை காயப்படுத்திக்கொண்ட மதுமிதாவும்தான். இவர்கள் இருவரையும் பிக்பாஸ் இறுதி போட்டிக்கு அழைத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இருவரும் வராதது பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு சின்ன வருத்தமே.

இதில் சரவணனிற்கு நிறைய ரசிகர்கள் இருகின்றனர். சரவணன் சாண்டி போலவே நன்றாக காமெடி செய்வதும், அனைவரையும் ஜாலியாக கிண்டல் செய்வதும் வழக்கம். ஆனால் ஏன் என்னவோ தெரியவில்லை. ஒரு சில காரணங்களால் சரவணன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். சமீபத்தில் சரவணனிடம் இதைப்பற்றி கேட்டபொழுது அவர் கூறியதாவது “பிக்பாஸ் இறுதிப்போட்டியில் பங்குபெறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பிக்பாஸ் பற்றி எங்கேயும் பேசவே கூடாது என்று முடிவோடு இருக்கிறேன்” என்று தனக்கே உரிய பாணியில் ஜாலியாக பேசியுள்ளார்.

கண்டிப்பாக சரவணன் தான் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறார். ஆனால் சிலரோ பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதுடன். அவர்கள் சரியில்லை இவர்கள் சரி இல்லை என்று குற்றம் சாட்டுவர். அதில் சரவணன் அவர்கள் கண்டிப்பாக நேர்மையான மனிதர் என்பது இதிலிருந்து தெரிகிறது.