Cinema

அசூரத்தனமான வசூல் வேட்டையில் தனுஷின் அசுரன்..! தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா..?

கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் திரையிட்ட இடமெல்லாம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்திற்கு எல்லா இடத்திலும் பாசிட்டிவ் விமர்சனம் வந்ததால் படத்தை ஏ, பி, சி சென்டர் ஆடியன்ஸ் கொண்டாடி வருகின்றனர். தனுஷிற்கு கடைசியாக வந்த வடசென்னையை தவிர சில படங்கள் சரியாக ஓடவில்லை. படத்தைப்பற்றி பலரும் ஜாதி வாரியாக பேசி சர்ச்சையை கிளப்பி வருவதால் படத்திற்கு இன்னமும் விளம்பரம் அதிகமாகியுள்ளது.

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி எப்பொழுதும் ரசிகர்களை ஏமாற்றாது என்பது இந்த இப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் அசுரன் திரைப்படம் இதுவரை 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அசுரன் திரைப்படம் சில திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இதே வசூல் தொடர்ந்தால் அசுரன் திரைப்படம் 50 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி 50 கோடிக்கு மேல் வசூல் செய்தால், தனுஷின் ஆல் டைம் பெஸ்ட் வசூல் என்ற பெயரை அசுரன் எடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Related Posts