Cinema

பிக்பாஸில் இந்த போட்டியாளர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்..! தர்ஷன் அதிரடி ..! யாரை கூறுகிறார் தெரியுமா..?

பிக்பாஸ் வீட்டைவிட்டு தர்ஷன் அதிரடியாக வெளியேறினார்.அதன்பின் பிக்பாஸ் போட்டிக்களம் சூடுபிடித்து வருகிறது. இன்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வனிதாவும் சாக்சியும் வருகின்றனர். பிக்பாஸ் போட்டியில் தற்போது நான்கு போட்டியாளர்களே களத்தில் உள்ளனர்.
இதில் முகினிற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. தற்போது தர்ஷன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எல்லோரும் என்னை மன்னியுங்கள், வீட்டைவிட்டு வெளியேறி, இவ்வளவு தாமதமாக வீடியோ போஸ்ட் செய்வதற்கு, பிக்பாஸில் நான் இவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும், அவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறவில்லை. உங்களுக்கு யார் பிடிக்கிறதோ அவருக்கு வாக்களியுங்கள்.” என்று கூறியுள்ளார்.

அதன்பின் அவர் கூறியதாவது ” அனுதாபத்தை தேடுவோருக்கும், கண்ணீர் விடுவோருக்கும் வாக்களிக்க வேண்டாம்.” என்பது போல சூசகமாக பேசியுள்ளார். இதைவைத்து பார்க்கையில் லாஸ்லியாவைதான் கூறுகிறாரோ என்று நெட்டீசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Posts