News

பேருந்திற்கு வழி விடாமல் நின்றது ஏன்..? வைரல் ஸ்கூட்டி பெண் கூறியதை பாருங்கள்…

கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் பேருந்து ஒன்றிற்கு வழிவிடாமல் ஸ்கூட்டியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் வீடியோதான் வைரலாகி வருகிறது. இடது புறத்தில் சரியான நேர்கோட்டில் நிற்கும் அந்த பெண்ணை மீறி பேருந்து ஓட்டுநர் வண்டியை இயக்க முற்பட, அப்படியே ஆடாமல் அசையாமல் சரியானது பாதையில் நின்று கெத்து காட்டினார் அந்த பெண். அவர் பெயர் சூர்யா மனிஷ். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.

நேற்று இவரது வீடியோ வைரலானதை பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது “இந்த வீடியோ இப்படி வைரலாகும் என்று நான் நினைக்கவில்லை. பேருந்திற்கு வழி விடக்கூடாது என்பதற்காக நான் நிற்கவில்லை. அந்த பேருந்து மிகவேகமாக என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் நின்றுவிட்டேன். உடனே அந்த ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை மெதுவாக இயக்கி இடது பக்கமாக சென்றுவிட்டார். நான் இந்த வழியாக 7 வருடமாக பயணிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதன்பின் அந்த பேருந்து ஓட்டுனரிடம் கேட்டபொழுது “அரசு பேருந்தை ஒரு தனியார் வேன் முந்திச்செல்ல முயன்றது அப்போது பேருந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தேன். ஆனால் எதிரிலோ அந்த பெண் ஸ்கூட்டியுடன் நின்றதால் பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தினேன். ஆனால் அந்த பெண் எனக்கு வழி விடமால் என்னையே உற்றுப்பார்த்தார். அதன்பின் இடதுபுறம் சென்றேன்” என்று கூறியுள்ளார்.

Related Posts