News

தலைமை செயலகத்தில் 14 துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்த 4 ஆயிரம் பட்டதாரிகளிடம் நேர்காணல்..! MBA, இன்ஜினியர் பட்டதாரிகள் கூறுவது என்ன தெரியுமா..?

தலைமை செயலகத்தில் பிப்ரவரி மாதம் 14 துப்புரவு பணியாளர்களுக்கான வேலை காலியாக இருப்பதாக அறிவித்தனர். அதன்பேரில் இந்த 14 துப்புரவு பணிக்கு 4000 க்கும் மேற்பட்டோர் வேலையில்லதாக இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் விண்ணப்பித்தனர். அதில் 3500 க்கும் மேற்பட்டோர் படித்த பட்டதாரிகள். அரசு வேலையென்பதால் இதற்கு முன்னுரிமை கொடுத்து விண்ணப்பித்துள்ளனர். துப்புரவு பணியாளருக்கான மாத சம்பளம் 15,700
மற்றும் இதர அரசு பணியாளர்களுக்கான பயன்களும், சலுகைகளும் இதில் அடங்கும்.

துப்புரவு பணியாளர்களுக்கான தகுதி குறைந்த பட்சம் எழுத படிக்க தெரிந்தால் போதுமாம். ஆனால் இதற்கு அதிகம் விண்ணப்பித்தவர்கள் MBA, இஞ்சினீரிங் இளைஞர்கள்.

இந்நிலையில் துப்புரவு பணியாளர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது “தற்போதுள்ள சூழ்நிலையில் தனியார் நிறுவங்களுக்கு சென்றால் சம்பவளமும் சரியாக வராது. அதுமட்டுமல்லாமல் 12 ஆயிரம் வரை கிடைப்பதால் அதைவைத்தும் அடுத்தகட்டத்துக்கு செல்ல முடியாது. அரசு வேலை என்பதால் கண்டிப்பாக நிறைய பலன்கள் கிடைக்கும், சலுகைகள் கிடைக்கும். இந்த வேலையை தொடர்ந்து வேறொரு வேலைக்கு நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.” என்கின்றனர்.

Related Posts