Cinema

தன் தாயை ஜாமினில் எடுத்த கவின்..? அடுத்து அவர் கூறியது என்ன தெரியுமா..? மனதை நெகிழ வைக்கும் தகவல் உள்ளே…

பிக்பாஸ் வீட்டிலிருந்து இரு தினங்களுக்கு முன்னர் கவின் வெளியேறினார். கவின் வெளியேறியதிலிருந்து ஜாலியாக இருந்த பிக்பாஸ் வீடே சற்று அமைதியாக மாறியது. அதன்பின் சிறப்பு விருந்தினர்கள் வந்தனர் மற்றும் சில ஜாலியான டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் கலகலப்பாக மாறினர். கவின் பிக்பாஸ் வீட்டைவிட்டு செல்லும்போது ஐந்து லட்சம் மற்றும் அவரது ஒரு நாள் சம்பளம் 30,000 இதை 92 நாட்களில் கணக்கிட்டு 30 லட்சம் வரையில் இருக்கும் மொத்தமாக 35 லட்சம் கவின் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கவின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் தனது தாயை சந்தித்து அவரையும் கவினின் உறவினர்களையும் ஜாமினில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் கவின் பாதிக்கப்பட்டோருக்கு பணத்தை கூடியவிரைவில் கொடுப்பதாக கூறியுள்ளாராம்.

கவினின் தாய்க்கு 5 ஆண்டுகள் மோசடி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் கவின் தனது தாய்க்காக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வரும் காலங்களிலே கவின் அவரது தாயை குற்றமற்றவர் என்று நிரூபிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Related Posts