News

206 முறையாக தேர்தலில் போட்டி..! 32 லட்சம் செலவு..! பணத்தில் சீமராஜாவும் இல்லை..! அதிரடி காட்டும் பத்மராஜா..!

நாங்குநேரி இடைத்தேர்தல் பரபரப்பாக சூடு பிடித்துவருகிறது. இந்த தேர்தலில் பத்மராஜா என்பவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே உள்ள வீரகாவல்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். பத்மராஜா வாஜ்பாய், ஜெயலலிதா, கருணாநிதி, ராஜசேகர ரெட்டி என்று பல தலைவர்களையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர்.

ஏன், குடியரசு தலைவர் தேர்தலிலும் அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜீ, ராம்நாத் கோவிந்த் ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டார். இதுவரை தேர்தல் டெபாசிட் தொகையான 32 லட்சத்தை செலவளித்துள்ளார். இதற்காக இவரை பெரிய செல்வந்தர் என நினைத்துவிட வேண்டாம். இவர் சாதாரண நடுத்தரவாசிதான். இது எல்லாம் பத்மராஜாவின் உழைப்பில் வந்த தொகையே.

தற்போது 206 வது முறையாக தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவதாக கூறும் இவர். தனது நோக்கம் வெற்றிபெறுவது அல்ல என்றும், கின்னஸில் இடம்பிடிப்பதே ஒரே நோக்கமாக இருப்பதாகவும், முன்னேறே லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டதாகவும். தற்போது கின்னஸில் இடம்பிடித்துவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திவிடுவதாகவும் கூறியுள்ளார். இந்தியாவிலேயே அதிக தேர்தலில் போட்டியிட்டவரும் இவர்தான். அதிக தேர்தலில் தோல்வியுற்றவரும் இவர்தான்.

Related Posts