Personality

PERSONALITY OF THE WEEK : நெல்சன் சேவியர்..!

இணையத்தில் நாம் ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ யாரோ ஒரு பிரபலம் அல்லது ஒரு சாமானியன் ஏதோ ஒரு நல்ல நிகழ்வு அல்லது வியப்பளிக்கும் செயலை செய்வதன் மூலம் மிகவும் பிரபலமடைகிறார்கள். அவர்களை நம் 24x7tamil மதிக்கும் பொருட்டில் வாரம் இரண்டு “PERSONALITY OF THE WEEK” நபர்களை நமது தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

அந்த வகையில் இந்த வாரம் நேர்காணலில் விமர்சக பேச்சாளர் ஒருவரை ஒரே ஒரு கேள்வி மூலம் பதிலளிக்க முடியாமல் தனது பேச்சாற்றலால் திணறடிக்க வைத்த நெல்சன் சேவியரை பற்றித்தான் இந்த பதிவு.

நியூஸ் 7 தமிழ் செய்திவாசிப்பாளர் மற்றும் எடிட்டராக இருந்து வருபவர் நெல்சன் சேவியர் . இவரின் பேச்சு திறமை மற்றும் பிரபலங்கள் முதல் கடைக்கோடி மனிதன் வரை அவர் அனுசரிக்கும் முறை எல்லாமே தனி சிறப்புதான். நெல்சன் பல அரசியல் தலைவர்களுடன் நேர்காணல் நடத்தியுள்ளார். கடந்த வாரம் ஹிந்தி எதிர்ப்பு பற்றி ஒரு நேர்காணலில் கட்சி பேச்சாளர்கள் மத்தியில் ஒரு நேர்காணல் நடத்தினார். அதில் அரசியல் விமர்சகரான சத்ய குமார் என்பவர் கூறியதாவது ” தமிழ் இளைஞர்கள் தமிழில் உள்ள புறநானூறு, அகநானூறு ஆகிய இலக்கியங்களை வளர்த்து விட்டு தமிழை பற்றி பேசி புகழ வேண்டும் என்று கூறினார். அதற்கு ஒரு ஒரு கேள்வி கேட்ட நெல்சன் அவர்கள் சத்யகுமாரை திணறடிக்க வைத்தார்.

நெல்சன் சத்யகுமாரிடன் “ஹிந்தில என்ன இருக்கு” என்று கேட்ட ஒரு கேள்விதான் தற்போது பேஷ்புக், வாட்சப், ட்விட்டர் என எந்த இணையத்தை திறந்தாலும் ஒரே ஸ்டேட்டஸ் மழையாக இருக்கிறது.

தனது கிடுக்கு பிடி கேள்வியால் ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் இடம்பிடித்த நெல்சன் சாவியார்தான் இந்த வாரத்தின் “PERSONALITY OF THE WEEK”.

Related Posts